காயா ஈரங்கள்
கண்களில் ஊறி
இமைகளில் உரசி
அருவியாய்ப் பெருகும் உவர்சுவை உயிர்த்துளியே!
இதயத்தின் குரலாய் நீயோங்கும் நாளி
நெஞ்சத்தின் உய்வுகள் உன்னில் கரைந்து
மஞ்சத்தை நனைத்திடுமே மாற்றார்கண்படா நேரம்!
மனதின் காயங்களை மறைத்து ஆற்றிட
மருந்தொன்றும் இல்லயே கண்ணீரை விடுத்தொழிய!
சபையிலும் ஊறும் பெண்களின் கண்ணீர்,
கண்ணீரல்ல கண்ணீரல்ல!
காண்பவர் கரைந்திடும் கந்தக அமிலம்!
மறைவிலே என்றும் ஆண்களின் கண்ணீர்
தனிமையில் காணும் ரகசிய தோழியாய்!
தோல்வியில் மட்டும் தந்தியாய் வருவதல்ல!
இனிமையான நேரத்திலும் இமைகளை வருடுமே!
கடல்நீரே காய்ந்தாலும் வற்றாது என்கண்ணீர்!
இதயத்தின் இருத்தலைச் சுட்டிடும் காட்டியே!
நீமட்டும் இல்லையென்றால் உணர்ச்சிகள் சென்றிடுமே
முடிவில்லா உறக்கத்திற்கு!