எல்லாம் உன்னால் தான்

என் வீட்டு கண்ணாடி என் பிம்பம்
பட்டே தினம் கதறிக்கொண்டிருக்கிறது
உன் கால் கொலுசோசைகாய் என்
வீட்டு முற்றது மரமும் காத்திருக்கிறது.......

எத்தனை முறை அலங்கரிப்பாய் என
என் அக்காவும் அதிசயிக்கிறாள்....
நான் கலைத்து போடும் ஆடை மடித்தே
என் தங்கை கலைத்து போகிறாள்.......

என் வீட்டு தினசரி உன் ராசி பலன்
பார்க்கவென என்னால் நாள் தவறாமல்
வாசிக்கப்படுகையில் அப்பாவின் முகச்சுளிப்பு
வாடிக்கையாகிப் போய்விட்டது நாள் தோறும்.........

அம்மாவின் அடுக்களை புலம்பலையும்
தாண்டி நீ உன் வீட்டு நாய்க்குட்டி கொஞ்சும்
மொழி என் காதுகளில் வடிகட்டி ஒலிக்கிறது
நீ கொஞ்சும் நாய்குட்டியாய் பிறக்காமல் நான்.......

நீ நீராடி நடந்து போகையில் சிந்தும் ஒரு
துளி அமிர்தமாய் சுவைக்கிறேன் நான்
என் வீட்டு தேநீரும் அதன் சுவை தோற்று போனதடி _ உன் சிதறல் நீரின் சுவையினில்......

எழுதியவர் : கனகீஷ் (5-Dec-13, 10:06 am)
சேர்த்தது : kanageesh
Tanglish : ellam unnaal thaan
பார்வை : 89

மேலே