நெறிகெட்ட மனிதர்கள்

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே
ஓடும் பேருந்தில் பெண்ணை
துகிலுரிய அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே
தானியிங்கி வங்கி இயந்திரத்தில்
பெண்ணை வெட்டி சாய்க்க அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே
மூச்சு விடும் நேரத்தில் வண்டி
பெட்டியிலே பணம் திருட அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே
வீட்டார் அஷ்டலக்ஷ்மி தனை தொழுது வர
திருட்டு லக்ஷ்மி வீட்டை சூறையாடா அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே
ஊரார் உழைப்பை சோம்பறி வர்க்கம்
அடித்து செல்ல அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்ல அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே
கணிபோறியே பயன்படுத்தி
பிறர் செல்வத்தை சுருட்ட அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே
சட்டத்தின் ஓட்டை உள்ள வரை
அச்சமில்லை அச்சமில்லை பவனி வர

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (8-Dec-13, 9:33 pm)
பார்வை : 130

மேலே