கொடுத்து வைத்தவள்

ஒரு நாள் ....!
அம்மா ....!
வீட்டில் இல்லாதபோது ......!
அதிகாலை நேரத்தில்
வாசலில் தண்ணீர் தெளித்து
கோலம்போட்டுகொண்டிருந்தேன் ......!
அப்பொழுது
தண்ணீர் பிடிக்க
என் வாசல் தண்டி
நீ செல்லுகையில் ......!
என்னிடம் இப்படி சொன்னாய்......!
"உன்னை கட்டிக்க போறவள்
கொடுத்துவைத்தவள்" என்று....!
அதற்கு..!
என் மனம்
உனக்கு பதில் சொன்னது
அந்த "கொடுத்து வைத்தவள்"
" நீதான்" என்று உனக்கு தெரியாதா என்று .....!

எழுதியவர் : கவிபாக்யா (9-Dec-13, 11:10 am)
சேர்த்தது : bakya
பார்வை : 86

மேலே