- புரட்டிப் பார்க்கிறேன் - எண் 02

மார்ச்சு -1989 - கா(க)ட்சி மாற்றம்
----------------- புதுக்கவிதை---------------

போன தேர்தலில்
புதுப்புடவை
பட்ட இடத்தில்
புழுதி சேர்க்கும்
வெட்டிப்பிளந்த
மரத்தைப் போல
வெடிப்புகள் உள்ள பாதங்கள்!
என்றோ எவரோ தந்த
மானியத்தில் கிடைத்த
எண்ணை தடவி
இன்று சிக்கலில் கிடக்கும் கூந்தல்!

இடை கருப்போ
உடை கருப்போ என்று
போட்டிபோடும் தோற்றம்!

வாயில் வெற்றிலை
நெற்றியில் குங்குமம்
செம்மையைப் பற்றிய
சிறு குறிப்பாக!

சுதந்திரத் தாயிவளின்
உலர்ந்த தோற்றம்...
சூழ்ச்சியால் வந்ததா?
வீழ்ச்சியால் வந்ததா?

காட்சியில் மாற்றம்
காண்பதும் கூடுமா?
கட்சிகள் மட்டுமே
மாறினால் போதுமா?

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (14-Dec-13, 7:41 am)
பார்வை : 899

மேலே