கோபம்
கோபம் உக்கிரம்
உக்கிரம் வெயில்
சரியா
சதாரண வெயிலுக்கும்
நிற்கலாம்
சதாரண மழைக்கு
நிற்க முடியாது
மழை தான் கோபம்
கொட்டி தீர்ப்பதில்
மழையிலும் கோபத்திலும் அனுபவிக்க
எதோ இருக்கிறது.
கோபம் பிடிக்கும்
அதற்கும் மேல் ஒன்றுமே
இருக்காதே
உண்மையான மனநிலையை
பார்க்கிறோம்
பொய் இல்லை
நேர்மையான உணர்வு
முகத்தை தூக்கி
வைத்துக்கொள்தல்
கண்கள் பெரிதாகி
விழித்தல்
கன்னங்கள் சிவத்தல்
இழப்புகளன்று கோபத்தை
தாண்டினால் பிறகு
அன்பு . . .
அன்பு . . .
அன்பு . . .