உங்கள் உள்ளங்கை

உலகத்தை
உள்ளங்கையால்...
அன்பு என்னும்
ஆற்றல் கொண்டு
அடக்கிவிடலாம்
என்பது உண்மை தான்...
ஆனால்,
அதே
கை மேல்
காசு என்னும்
கருவியை வைத்துவிட்டால்
ஆசையானது,
அந்த கையை
விரித்து விட்டு
அன்பு இருந்த இடத்தில்
அது வந்து அமர்ந்து கொள்ளும்…
ஆசை...!
இது
மனிதனை
ஆட்டி வைக்கும்
ஒரு ஆபத்து ...
எத்தனை
மனிதர்கள்
இதை அளவோடு
அடக்கி ஆளுகிறார்கள் ...?
அடக்கி
ஆண்டவர்கள் எல்லாம்
ஆண்டவன் போல
மாறிவிட்டார்கள்...
ஆசைக்கு
அடிமையாகி
போனவர்கள் எல்லாம்
அவர்கள்
அவர்களையே
அழித்து கொண்டார்கள் ...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

நீ ஓர்...
கவின் சாரலன்
29-Mar-2025

போகுமிடம் வெகு...
Ashok4794
29-Mar-2025
