அழுத பிள்ளை பொருளாதரத்தை வளர்க்கும்

தொட்டிலுக்குள் நான் கண்டேன்
தோட்டத்து செண்பகப் பூ.....!
கட்டிலதன் கால் உடைத்து காதல்
கண்டெடுத்த மல்லிகைப் பூ....!!
சப்தமின்றி நீ இருந்தால் மீண்டும்
சப்தமிடும் வீட்டுக் கட்டில்......!!!
சட்டென்றே நீ அழுது மீண்டும்
சந்தோசத்தை வளர்த்து விடு....!!!
தொட்டிலையும் ஆட்டி விட்டு நான்
பிள்ளையையும் கிள்ளுகிறேன் ஏன் ?!
தொலையட்டும் வறுமைக் கோடு
துலங்கட்டும் தெளிவு என்றே .......!!
ஜன்னல் வழிக் கண்டேன்
ஜாலியாய் ஒரு கூட்டம்
குட்டிகள் பல சூழ
கும்மென்று பன்றி ஒன்று..!
எங்கே அதன் ஜோடி
எனக்கொன்றும் தெரியவில்லை ?!
உணவைத்தேடி ஓடுது பெருசு
உயிரைக் காக்க தொடருது சிறுசு...
தன்னைக் காக்கவே திணறுது உலகு - நாளைய
தலைவா நான் சொல்வதை நீயும் உணரு
மனிதர்கள் நாமும் ஈசல்கள் அல்ல
மள மளவென்று அதைப் போல் பல்கியே பெருக...
போதுமென்ற மனமே புன்னகையின் வரமே-எனவே
பூவே நீ அழுதே அந்தச் சிணுங்கள்-கல்-கலை
கொஞ்சம் நிப்பாட்டு.....!