என்ன சொல்ல நினைத்திருக்கும்

தேனுண்டு பறந்து செல்லும்
வண்ணத்து பூச்சிகள் பூக்களிடம் !
சிறகுகள் முளைத்து கூண்டைவிட்டு பறக்கும்
பறவைகள் கூட்டிடம் !
வெட்டப்படும் மரங்கள் அதன் வேர்களுக்கு !
பூக்களை பறிக்கும் போது
கம்புகள் பூவிடம் !
தெரிந்தால் சொல்லுங்கள்
பிரிவின் மொழி எதுவென்று ?