புத்தம் புது கவிதைகள்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கின கவிதைகள்
பூப்பறிக்க சென்ற மகள்
பறித்து வந்தாள் கொத்தாக

வாசமாக வீட்டினுள் பரவியது
கணநேரம் மெய்மறந்து ... பின் மறந்துவிட்டோம்
வாசிக்கச் சொல்லி வீட்டைச் சுற்றின
அழகான குட்டிக் கவிதைகள்

சமைத்துக் கொண்டிருந்தேன் நான்
படித்துக் கொண்டிருந்தார் கணவர்
விளையாடிக் கொண்டிருந்த மகளுடன்
ஓட்டிக் கொண்டது குட்டிக் கவிதையொன்று

மகளின் புன்னகையாக, மழலையாக
கோபமாக, அழுகையாக என
நித்தம் வாசித்துக் கொண்டிருக்கிறோம்
புத்தம் புது கவிதைகளை...

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (4-Jan-14, 2:13 pm)
பார்வை : 169

மேலே