நமது தமிழ் தேசிய இனத்தின் ஒற்றுமை

நம் நாட்டினில் எங்குதான் நாம்
ஒழிந்து கிடந்தாலும்
என்றோ ஒருநாள் நாம்
ஓன்று சேருகிறோம் !

தமிழனுக்கு ஓன்று என்றால்
நாம் பாய்ந்து ஓடுகிறோம் !
தமிழுக்கே ஓன்று என்றால்
நாம் துடித்து போகிறோம் !

நாட்டுக்காகவும், தமிழுக்காகவும்
நாட்டு மக்களுக்காகவும்
நாம் உயிரை கொடுக்கிறோம் !

நம் நாட்டில் எத்தனை கோடி
மக்கள் பறந்து விரிந்திரிந்தாலும்
இந்தியன் என்பதை
மனதில் கொண்டு நாம்
ஒற்றுமையோடு வாழ்கிறோம் !

நான் இந்தியன் என்று
அனைவரின் இதயத்தில்
வாழும்வரை எதிரிகள்
தமிழனை நெருங்க முடியாது !

நமது தமிழ் தேசிய இனத்தின்
ஒற்றுமையே கழைக்க முடியாது !

ஒற்றுமையே பேணி காப்போம்
நம் நாட்டை வல்லரசாக மாற்றுவோம் !


--lakshmi777
15 சனவரி 2014

எழுதியவர் : lakshmi777 (16-Jan-14, 3:02 pm)
பார்வை : 1227

மேலே