உண்மைச் சம்பவம்
இசக்கி, இன்னைக்கு தொழிலுக்கு எங்க போறோம்?
என்ன மாரி, வழக்கம் போல தலைவர்தான சொல்லுவாரு!
இல்ல இசக்கி, நாம இருக்கிற இடத்துக்கு பக்கத்துலய நமக்கு தேறும்னு நெனக்கிறேன் ஆனா தலைவரு ஒவ்வொரு தடவயும் வேற வேற இடத்துக்கு போகனும்னு நெனக்கிறாரு.
மாரி, என்னாச்சு உனக்கு தலைவற நம்பிப் போயி நட்டம் ஒன்னுமில்லயில்ல. பாரு மாரி தலைவரு வர்ற நேரத்துல எதயாவது பேசிகிட்டு கிடக்காத அப்புறம் அவரு காதுல விழுந்துறப்போது
விழட்டும். விழட்டுமேன்னு தான் சொல்றேன்.
என்ன இசக்கி, மாரி என்ன பிரச்சினை
தல ஒன்னுமில்ல தல சும்மா மாரியும் நானும் பேசிக்கிட்டு இருந்தோம் – இசக்கி
இல்ல ஏதோ காரசாரமால்ல இருந்துச்சு – தலைவர்
ஆமா தல டெய்லி தொழிலுக்காக ரொம்ப தூரம் போறது கஸ்டமாயிருக்கு அதான் சொல்லிக்கிட்டுருந்தேன் – மாரி
மாரி தூரம் போறது கஸ்டந்தான் இல்லன்னு சொல்ல்ல ஆனா பொழப்ப பாக்கனும்ல. இங்க இருக்றவனுக்கள பாரு வத்தலும் தொத்தலுமாயிருக்கானுங்க இவனுங்கட்ட என்ன தேறும் நெனக்கிற
அதான் நான் டெய்லி ஒவ்வொரு இடமா நோட்டம் போட்டு வந்து உங்க்கிட்ட சொல்றேன். நான் யாரையும் கஸ்டப்படுத்தல அவுங்கவுங்களுக்கு எங்க இஸ்டமோ அங்க போயி தொழில பாருங்க. நான் என்ன உங்க்கிட்ட இருந்து மாமூல் கேட்டனா. இங்க நாம ஒவ்வொருத்தரும் எவ்வளவு தேத்றமோ அத அவுங்களே வச்சிகிடுங்கன்னு தான சொல்லிருக்கேன். அப்புறம் என்ன?
இப்பக்கூட பஸ்ஸ்டாண்டு பக்கத்துல ஒரு வீட்ட நோட்டம் பாத்துட்டு வந்தேன் நல்ல பெரிய வீடு,வீட்டுல அஞ்சு ஆறு பேரு இருக்காங்க, எல்லாருமே நல்லா புஷ்டியாத்தான் இருக்காங்க பணக்காரனா இருப்பான் போல, அங்க போன கொஞ்சம் நமக்கு கூடுதலா தேறும் அப்படியே கொஞ்ச நாளுக்கு செட்டிலாயிடலாம். இஸ்டம்னா வாங்க இன்னிக்கு நைட்டு போயி கை வச்சிரலாம்.
தல நாங்க வர்றோம் – இசக்கி
மாரி ஒன்னும் சொல்லலியே – தலைவர்
வருவான் தல என்ன மாரி சொல்லு – இசக்கி
சரி தல இன்னைக்கு வர்றேன் , ஆனா கொஞ்சம் நான் சொல்றதயும் யோசிங்க – மாரி
சரி மாரி ஒன்னு வொரி பண்ணாத இன்னைக்கு வேலைய முடிச்சிட்டு அப்புறம் உக்காந்து பேசுவோம். இசக்கி நீ கொஞ்சம் கவனமாயிருப்பா இப்ப எல்லாவீட்டுலயும் இந்த குட்நைட் ஆல்அவுட்டுன்னு புகையவிட்டுகிட்டிருக்கானுங்க அது உடம்புக்கு ஒத்துக்கிட மாட்டேங்குது – தலைவர்
தல அதுலஒன்னும் எபெக்ட இல்ல நம்ம குரு சொன்னான் தல
அப்புறம் மாரி அவிங்க இரண்டுபேறும் எங்க – தலைவர்
தல சுப்பும், கருப்பனும் தான வந்துருவாங்க தல இன்னைக்கு கண்டிப்பா எல்லாரும் சேந்து போறோம் தல – மாரி
இரவு 11.50
மாரி, இசக்கி, சுப்பு, கருப்பன் அனைவரும் தலைவருடன் சேர்ந்து அந்த வீட்டை அடைந்தனர்.
எப்பா பார்த்து கவனமா நடந்துகோங்க யாரையும் எழுப்பிடாதிங்க அப்புறம் நமக்குத்தான் கஸ்டம் இது தான் அந்த வீடு பொறுமையா உக்காந்து வேலை செய்ங்க ஒன்னும் அவசரமில்ல சரியா – தலைவர்
சரி தல கவலயவுடுங்க அம்முட்டயும் தேத்திறலாம் - இசக்கி
தல சரியான இடத்த தான் புடிச்சிருக்கிங்க சாரி தல – மாரி
சரி சரி வந்த வேலையப்பாருங்கப்பா – தலைவர்
தல கவுத்திட்டானுங்க தல இது என்ன பேட் மாதிரி இருக்கு
ஆத்தாடி சாக்குல அடிக்குது ......
மரண ஓலத்தோடு ஒவ்வொன்றாய் செத்து மடிந்தது அந்த
அய்ந்து கொ..சு..க்களும்....