யாதுமாகி நின்றாய்
பஞ்ச பூதங்களில் வாயுவாக
(பிராணவாயுவாக)நின்றாய் (21%)
நீராகவும் உள்ளாய்..!
இரண்டு ஹய்ட்ரஜன்
அணுவின் துணையோடு.
நெருப்புக்கும் துணையானாய்,
நீயின்றி நெருப்பே ஏது?
நிலமென்னும் மங்கையினுள்,
இரண்டறக் கலந்துள்ளாய்..!
எதுவாகவும்.!
உன்னைப் பிரித்தபின் தான்
உயிரில்லாத உலோக
அலோகங்கள்.
பிரபஞ்சமெனும்
அண்ட வெளியில்
அங்கங்கே உன் பிரவேசம் ,
நீயின்றேல் பெருவெடிப்புக்
கொள்கையும் பொய்யே!
கடவுளே
உன் பெயர் தான்
ஆக்சிஜன் என்று சொன்னால்
மறுப்போர் உண்டெனில்
அவரும் நாத்திகர் அல்லர்!
நீ உந்திப் பிரவேசிக்கும்
போதுதான் சிவனின்
கோர தாண்டவம்.
(ஆக்சிடைசர்கள் )
(H2O2 H2SO4 HNO3)
இதனால் பூலோக சிவன்கள்
எரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில்
சக்தியும்...சிவமும்
சங்கமமான ...சமன்பாடுகள்...!