காதலின் எச்சில்
காதலே
கட்டிலுக்கு வரவேண்டாம்
கனவிலாவது வா !
பட்டு விரிப்பில் பன்னீர் தூவி
பழரசம் தரவேண்டாம்
பட்டு வீழ்ந்தான் கொற்றன்
சுட்டு எரித்தார் சுற்றம்
இப்படித்தான் முடியும்- என்
இறுதிச் சடங்கும்
அப்போதாவது
உன் கண்கள் வடிக்கட்டும்
காதலின் எச்சிலை