பெண்ணிற்கும் காதல் வலி உண்டு
பெண்ணிற்கும் காதல் வலி உண்டு !
ஆனாலும்
இவள் தேடியதில்லை மதுவையும்
போதையையும் ....அடிமையாய் !
இவள் நாடியதில்லை மாமனையும்
மச்சானையும் .....நண்பர்களாய் !
இவள் சோகத்தை மறந்ததில்லை
கானா மெட்டில்... பாடல்களாய்!
இவள் பழி சுமத்தியதில்லை
ஒட்டுமொத்த ....ஆண்வர்க்கத்தை !
இவள் கேட்கத் தவறியது இல்லை
மனம் கூசும் ....விமர்சனங்களை !!!