கூந்தல் மணம் இயற்கையா செயற்கையா - குறுங்கவிதை

மலர்மூழ்கி எழும் கற்று
மணம் வீசும்
அவள் கூந்தல் குளித்த தென்றல்
உயிர் ஈர்க்கும்
இயற்கையா? செயற்கையா?
வாதம் வீணே
பூசுகின்ற பொருளில்
வெறும் வாசம்தானே
அவள் கூந்தல்
தொட்டு வந்தால்
சொர்க்க வாசல்தானே
இயற்கை மணங்களையும்
இன்பம் ஆக்கும்
வெற்று மணத்திற்கும்
மேன்மை சேர்க்கும்
உயிர் ஊட்டும்
மனம் ஈர்க்கும்