எதுவும் மாறவில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
பெரிதாய் எதுவும் மாறவில்லை...
புதிதாய் எதுவும் தோன்றவில்லை...
அதே சுவாசம் அதே திணறல்...
அதே கீறல் அதே ரத்தம்...
அதே ஏக்கம் அதே அழுகை...
அதே குற்றம் அதே விசாரணை...
அதே தீர்ப்பு அதே கண்ணீர்...
மாற்றம் எதிலுமே இல்லை!
காயம் மட்டும்...
இன்னும் பெரிதாய்
புத்தம் புதிதாய்
கொஞ்சமும் ஆறாமல்
குருதி காயாமல்
குத்திக் குத்தி வலிக்க ஏதுவாய்
கர்வமாய் வீங்கிக் கிடக்கிறது !!