துரோகியாய்
துரோகியாய் வாழ்கிற விதியிருந்தால்,
நல்லவரென்ற பெயரெடுக்கமுடியாது,
எவர்களிடத்தும் எந்தநிலையிலும் !
பயணிக்கட்டும் உன் பாதங்கள்,
உளைச்சல்களுக்கு இடம்தராத பாதையினில் !
சிறியமுள் குத்தினாலும் நெடியஅம்பு பாய்ந்தாலும்,
துரிதமாய் சுமத்து வலியையும் பழியையும்,
உன்மீது நீயே தயக்கங்கலில்லாமல் !
பழிபாவங்களுக்கு அஞ்சுவதாகவே இருக்கட்டும்,
எந்த நிர்கதியிலும் உனது தளராத நெஞ்சு !
நீ மனிதப்பிறப்பா என்ற ஆராய்ச்சிகள் வேண்டாம் !
அதேநேரம் உன்மீது குறிவைத்து,
பேயாய் சாய்பவர்க்கும் நாயாய் பாய்பவர்க்கும்,
சகிப்பையும் அமைதியையும் பதிலாய்க் கொடு !
உன் பொன்னான உனதான உலகுக்குள்,
வல்லூறுகளும் காட்டேறிகளும் வந்துசேர்ந்தது,
உனது தவறென்று உடைந்துபோய்விடாதே !
அனுஷ்டி துக்கமாய் அவர் சோதிக்கிற நாட்களை !
தாண்டத்தான்வேண்டும் அணைத்து தடங்கல்களையும்,
வேண்டிய இடத்தை சென்றடைந்து இளைப்பாற,
அதுகாறும் துணைக்கு அழைக்காதே எவரையும் எதற்கும் !
தனிமைமட்டிலும் உன் வினாக்களுக்கு சாதகமாய் கவரிவீசும் !
எனில் விலகிநட மனிதர்களை மனிதர்களுக்குல்லேயே !
துரோகி என்று அவர் தந்த பட்டத்தை தலையிலும்,
கர்மவான் என்ற நிதர்சனத்தை கால்களில் தாங்கியும் !!