அழித்தாலும் அழியாது
எட்டுத்திக்கும் இறைவன் கண்டு
பற்றானோடு சேர்ப்பாய்யென்று
நோம்புநோற்று காடெல்லாம் திரிந்து
மலர் கோர்த்து மங்கை இவள் உன் அருள்கொள
உன் மலர் பாதம் பற்றி அன்பென்னும் பிச்சை கேட்க திக்கற்று திசைமாறி -பாவமேற்ற
என் உடலை வில்லென வளைத்து
அம்பென எய்தாய் என் இதயத்தை - அது
சட்டென்று சடுதில் பட்டு
பட்டென்று வெடித்து
வலிதாங்க இதயம் சொன்னது
" உன்னை தாங்கும் இதயம் உன் கரத்தாலே மாய்வதா!!! "
உன் நினைவாலே உறுபெற்று மீண்டும் சொன்னது "அழித்தாலும் அழியாது " என்று.!!!!*