விலைபோக முதிர்ந்த கனி

வானைக் கூரைகட்டி
வானிலவை விளக்காக்கி
விண்மீன்களை தோரணைகட்டி
காத்திருக்கும் கன்னியரின்
தவிப்பு இது !

ஆளா வெளஞ்சு நின்னு
ஆறேழு வருசமாச்சு
அத்த மகன் வருவானு -நெனப்ப
அள்ளித்தான் முடுஞ்சாசு ,

பருவம் வெளஞ்சு இருக்க
பாவிமகன் அறுவடைக்கு
வருவானோ!

என் தோழி
குழந்தை கண்டு
குமரி நான்
குமுறி அழுதேனே,

மாலையிட தோளுந்தான்
மசமசன்னு அரிக்குதையா
மஞ்சள் குங்குமமிட
நெற்றியுந்தான் விரும்புதையா,

பட்டினி விரதமிருந்து
பச்சைக்கிளி தவமிருந்தேன்
பட்டணத்து மாமன் மகன்
பச்சைக்கொடி காட்டுவாரோ!

ஏழை பெத்த புள்ள
ஏக்கந்தான் நெஞ்சுக்குள்ள
ஆசை மனசுக்குள்ள
அச்சாரம் போடுவாரோ!

கரிச்சட்டி வெலக்கி
கைரேகை தேஞ்சாச்சு
கருவேலம் விறகு சுமந்து
தலையுந்தான் வலுச்சாச்சு,

எண்ணெய் தேய்த்து
தலை வாரி
தலைமேல மலர் சூடி
கையிலதான் தேனீர் கொண்டு

குடித்தார் எல்லாம்
என்னை பிடிக்கும் என்று
நினைத்திருந்தேன் -பிடித்தது
நான் கொடுத்த தேனீர் மட்டுமே!

உன் வருகையை சுமந்து
வாசல் வந்து காத்திருக்கேன்
கண்ணகியாய் நானிருக்கேன்
கோவளன் என் காவலாய் வருவானென்று...

பருவ பெண்ணின் ஏக்கம் ....

===============================================இது என் கற்பனைக்கு எட்டியதை படைத்துள்ளேன்
தவறுகள் இருந்தால் கூறுங்கள் அடியேன் திருத்திக்கொள்கிறேன் ...
===============================================

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (21-Feb-14, 10:52 am)
பார்வை : 142

மேலே