என்கண்ணருகே நிற்பவளே

என்கண்ணருகே நிற்பவளே

செவிகள் இரண்டும் கேட்டப் போது கூட
நம்பவில்லை
உன்னிய குரல்களை ....................................!

கண்கள் இரண்டும் பார்த்தப் பொது கூட
விரும்ப வில்லை
உன் அழகினை.................................................!

பக்கத்தில் வந்து நின்றபோது
மாத்திரம் பற்றிக்கொள்ள வைத்தாயே
எங்கே கற்றுக் கொண்டாய்
இந்த யுத்தியை...............................................!

காதலில் புதிய கிரகத்தை
காட்டினாயே எனக்கு
காத்திருந்த நாட்கள் முதல்
என்கண்ணருகே வந்த
நிமிடங்கள் வரை
கத்தி முனையில் நிற்க வைத்தாயே
இது உனக்கே தகுமா?

என்கண்ணருகே நீ இருந்தும்
நம்ப முடியவில்லை
இது நீ என்று
நம்ப முடியவில்லை என்பதற்காக
போ என்று சொல்லிவிடவா
முடியும்?

என்கண்ணருகே நிற்பவளே
நீ இன்றி நானில்லை என்பது
உனக்கு தெரியாதா?
அல்லது தெரிந்தும்
நடிக்கிறாயா? என்னிடம் !

செய்வதறியாது தவிக்கிறேன்
தடுமாறுகிறேன்...............
என்கண்ணருகே நீ இருப்பதால்
பலகோடி வார்த்தைகள்
மூளைக்குள் முனுமுனுகிறது
அவளுக்காக நீ வரைந்த
காதல் காவியங்களை
அவிழ்த்து விடு என்று...........

என்கண்ணருகே நிற்பவளே
வாய் வரை வரும் வார்த்தைகள்
ஒவ்வொன்றும் உமிழ்
நீருடன் கலந்து
மீண்டும் உள்ளே சென்றுவிடுவதை
யாரரிவா?

வருடங்கள் நிமிடங்கலாவதும்
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
வருடங்கலாவதும்
இந்த காதல் வந்து
காத்திருக்க செய்யும்போது தானே!

எழுதியவர் : சுரேந்திரன் (24-Feb-14, 3:36 pm)
சேர்த்தது : சுரேன்
பார்வை : 93

மேலே