தீண்டியது ஆறாம் அறிவு
மேகம்
என்னைத் தீண்டியது
மழைத் துளிகளின் ஈரத்தால்..!!
நிலவு
என்னைத் தீண்டியது
சிறு ஒளியின் வெள்ளத்தால்..!!
அலை
என்னைத் தீண்டியது
பெரும் ஓசையின் ஆர்பரிப்பால்..!!
மலர்
என்னைத் தீண்டியது
வாசம் கொண்ட சுவாசத்தால்..!!
தேன்
என்னைத் தீண்டியது
எச்சில் கொண்ட இச்சையால்..!!
உடல் வளர்க்கும் தாகத்தால்
தீண்டியது என்னை
தேன்..!!
இனம் வளர்க்கும் சூத்திரத்தால்
தீண்டியது என்னை
மலர்..!!
அதிர்வுகளின் ஊடத்தால்
தீண்டியது என்னை
அலை..!!
சூரிய ஒளியின் விசாலத்தால்
தீண்டியது என்னை
நிலவு..!!
வெப்பச் சலன சூட்டினால்
தீண்டியது என்னை
மேகம்..!!