ஏழையின் முன்னேற்றம்

வறுமையின் கொடுமையில்
கொடியென படர்ந்தது - இந்த
இளம் பிஞ்சுகளின் வாழ்வில்
தாயின் மடியில் தவழும் பிஞ்சு
இன்னொரு பிஞ்சின் இடுப்பில்..........

பணக்குப்பையில் நிம்மதி தேடும் ஒரு கூட்டம்
குப்பையில் உணவு தேடும் இங்கொரு கூட்டம்
தன் பசியாற்ற தயாரில்லாத பிஞ்சு
இன்னொன்றின் பசியாற்ற தயாராகிறது ......

நகரத்தில் கிழிந்த புடவை நாகரீகமானதால்
இவர்களுக்கு புடவை அரிதாகிறது.....

பணம் வங்கி ஏற
ஆணவம் குடி கொள்ள
குணம் குப்பை மேடேற
மனிதநேயம் மலையேறும் காலம் இது ........

ஏழையின் முன்னேற்றம் ஏமாற்றத்தில் முடிய
தர்மம் தலை குனிந்து வேடிக்கை கொள்கிறது
ஏமாற்றம் செய்வதே வாழ்வென கொண்ட கூட்டம்
முன்னேற்றம் காணும் காலம் இது
தெய்வம் கற்சிலையாகவே காட்சியளிக்கின்றது .

எழுதியவர் : அன்புடன் விஜய் (15-Feb-11, 7:14 pm)
பார்வை : 794

மேலே