உலக கோப்பை யாருக்கு கிடைக்கும் ?

சிங்கப்பூரின்* சோதிட கிளி
செல்லமாய் இருந்த ஆக்டோபஸ் பால்*
இரண்டும் சொன்னது வெற்றி கணிப்பை
இருந்தாலும் தோற்றது சிங்கபூர்* கிளியே

விளையாடினால் வெற்றியுண்டு
விதி நினைத்ததா இறக்குமென்று
உலககோப்பை கால்பந்தின் போது
உயிருடன் இருந்த ஆக்டோபஸ் பால்*

உலககோப்பை மட்டை பந்து வந்தது
ஒட்டுமொத்தமாய் ஒரேயொரு கேள்வி
யார் வெல்வார் உலக கோப்பை
இன்று முதலே விளம்பரத்தில் வெற்றி

எஞ்சியது மட்டுமே விளையாட்டுக்கு வெற்றி
இறந்து போகாத கூண்டு கிளி சோதிடம்
கோப்பையும் மதுவும் கூடவே மாதுவும்
குடியை கெடுக்கவே இதுபோன்ற கேள்விகள்

* பிறமொழிச்சொல்

எழுதியவர் : . ' .கவி (15-Feb-11, 7:08 pm)
பார்வை : 450

மேலே