தாய்த்தமிழ்

நம் தாய் தமிழ்நாட்டில்

தமிழ் பிள்ளைகளுக்கு

தாய் மொழி தெரியாது

ஆங்கிலமோ அத்துபடி

வடமொழிகள் தெரியும்

ஏன் இந்த அவலம்

யார்தான் இதன் காரணம்

வீணே மேடைப்பேச்சில்

தமிழ் வாழவெண்டும் என்றால்

தமிழ் வாழ்ந்து விடாது

ஒவ்வொரு தமிழ் மகனும்

தன் மக்களுக்கு தமிழை

இனிதே கற்று தரவேண்டும்

ஆத்திசூடியும் ஒளவைத்தமிழும்

கவிமணி பாடலும்

ஆங்கில "ரைமுடன்"

பள்ளிதோறும் போதிக்கப்பட வேண்டும்

மொழிகளெல்லாம் கற்றிடலாம்

தாய் மொழியை மறந்திடலாகாது

தாய் மொழி வாழ்வாங்கு

வாழ வேண்டும்

நாமும் அதில் கவனம்

சட்ற்றே காட்டவேண்டும்

i

எழுதியவர் : வாசவன் -வாசுதேவன்-தமிழ்பி (2-Mar-14, 3:20 pm)
பார்வை : 85

மேலே