விடியாத இரவொன்று வேண்டும்

கடலின் நடுவினிலே
கட்டுமரத்தில் நீயும் நானும்,
காதல் பேசுவது சரியா? தவறா?

என் எதிரே நீ இருக்க
வெண்ணிலவும் இப்பொழுது
போட்டிக்கு வருவது சரியா?தவறா?

உன்பேச்சை மறித்திடும்
அலையை நான் வெறுப்பது
சரியா? தவறா?

உன்கை கோர்க்காமல்
துடுப்பை நானும் வலிப்பது
சரியா?தவறா?

பெண்ணே
பதில் சொல்லிவிடு
உன் நினைவில் நான் வாழாவிட்டாலும்
உன் நினைவாலே வாழ்ந்துபோகிறேன்!

உன் அழகாலே
கடலும் முர்ச்சையனது!
விண்மீனும் கண்ணீர் சிந்துது !
நிலவுக்கும் வேர்த்து கொட்டுது!

கட்டுமரம் ஆடையிலே
என் மனமும் ஆடகண்டேனே !
பெண்ணே
ஒரு வார்த்தை பேசிவிடு
என்செவி மோட்சம் பெறும் !
ஒரு பார்வை வீசிவிடு
என்கண்கள் பேறு பெறும்!
ஒரு முறை தீண்டி விடு
என் கைகள் இன்பம் கண்டுவிடும்!
உன் இதழ் பதித்துவிடு
பெண்ணே
என் ஆன்மா சாந்தி பெறும்!
போதும் என்று சொல்ல மனமில்லை
இறைவனிடம் கேட்கிறேன் .??

"விடியதா இரவொன்று வேண்டுமென்று "

எழுதியவர் : vibranthan (9-Mar-14, 5:15 pm)
பார்வை : 136

மேலே