கிராமத்து மண் வாசனை

ஆற்றோர மணலெடுத்து!
முற்றத்திலே கொட்டி வைத்து!
சுற்றிருந்து குடும்பம் ஒன்றாய்!
கதைகள் பல பேசிடலாம்!
புதிர் நெல்லரிசெடுத்து!
புதுப் பானையிலே சோறாக்கி
உறவுகள் ஒன்று சேர்ந்து!
மனமாற உண்டிடலாம்!
பதினாலாம் திங்களிலே!
முற்றத்து மணலினிலே!
குளிர் தென்றல் மெதுவாய் வீச!
கற்பனையில் ஆழ்ந்திடலாம்!
ஊரவர்கள் ஒன்று சேர்ந்து
கிராமத்து விழாக்களிலே
பண்பான வார்த்தை பேசி
விரோதம் பல மறந்திடலாம்!
வண்டியிலே மாடு பூட்டி!
குடும்பமொன்றாய் அதிலேறி
தூரத்து மாஞ்சோலையிலே!
அமர்ந்திருந்து வந்திடலாம்!
ஆற்றினிலே கண்ணி வைத்து!
அதிகதிகம் மீன் பிடித்து!
நெருப்பினிலே சுட்டு அதை!
சேர்ந்திருந்தே உண்டிடலாம்!
ஒற்றையடி கால் பதித்து!
ஒருவர் பின்னே ஒருவர் சென்று!
ஊர் கதைகள் பல பேசி!
களிப்பாகச் சென்றிடலாம்!
சலசலக்கும் ஆற்றினிலே!
தோழர் பலர் ஒன்று சேர்ந்து!
குதித்து குளித்துக் களித்தே
சிரித்து மகிழ்ந்திடலாம்!
ஊர்த் தலைவர் முற்றத்திலே!
ஊர் வழக்கு பல பேசி!
முரண்பாடு பல தீர்த்து!
கை கோர்த்துச் சென்றிடலாம்!
புள்ளினமும் விலங்கினமும்!
சேர்ந்திருந்து கவி பாடும்!
சோலையிலே அமர்ந்திருந்து!
எம்மை நாமே மறந்திடலாம்!
கிராமத்து வாழ்க்கையினை!
வாழ்த்த ஒரு வார்த்தை இல்லை!
வழமாக வாழும் பூமி!
வந்தவரை வாழ்த்தும் பூமி!