காதல் கானல் நீரல்ல
அடம்பிடித்தே,
அழகான உன் விரல் பிடித்தேன்...
இம்சை செய்யும் உன் இடை வருடி,
கடற்கரை மணலில் கால் புதைத்தேன்...
கவிதைகள் பல உனக்காய் படைத்தேன்-அதை
கடலின் கண்ணீர் துளிகள் முத்தமிட்டது..
என் சோகங்களை அலைகளின் நுரைகளில் கலந்தேன்-அது
மேகத்திடம் முறையீட்டு மோகமழை பொழிந்தது உன்னுள்....
என் சோகங்களை, உன்னை தொட்டு சொல்ல வந்த மழை துளியை குடைபிடித்து தடுக்குறாய் நீ....
குற்றால சாரலாய் அழுகிறது என் மனம்....
தெத்துப்பல் சிரிப்பினில் என் சோகம் களைந்தாய் - என்
ஒற்றை இதயத்தில் நீதான் நுழைந்தாய்...
அழுது தொலைத்த நிமிடங்கள் மறந்தோம்
அழகான நொடிகளின் அன்பினில் கலந்தோம்....
நம் நினைவுகள் அனைத்தும் நிஜமாக வேண்டும்...
என் வாழ்க்கை துணையாய் நிஜமாய் நீ வேண்டும்...