தன்னம்பிக்கை
இயற்கையாய் தோல்விகள் தொடர்ந்து வந்தாலும்
அலைகளாய் அவமானங்கள் மோதி இடித்தாலும்
பாதையை பலமாய் அமைத்து
தன்னம்பிக்கையை தகர்த்தெரியா ஓவியமாய்
மனதிலே வரைந்து வை
பறவைகள் மென்மேலும் பறக்கும் போது
பாதைகள் மாறுவது இயற்கை தான்
நீயும் மென்மேலும் பறக்க பாதைகள்
சில நேரம் மாறத்தான் செய்யும் .