அயல் சேர்க்கை - பொள்ளாச்சி அபி
இயற்கை செழிப்புதான்
அரசியல்வாதிகளுக்கு
அள்ளக் குறையாத மணல்..!
------------
முகநூல் படிப்பவர்களுக்கு
பரீட்சை..
எல்லோரும் முனைவர்களே..!
---------------------
வெளிநாட்டுப் பிள்ளையின்
பணத்தில் உயர்ந்தது
தனிமைச் சிறை..!
--------------------
குளிரறையில் எழுதிய
வியர்வை கவிதைக்கு
இனிதான் பிணபரிசோதனை ..!
----------------
அகதிமுகாம் வேலிமீது
நின்று கொண்டிருக்கிறது
சுதந்திரம்..!
============
தோழர் கலைக்கு நன்றி..! எனக்கும் சேர்த்து அவர் சிந்திப்பதற்காக..! -அன்புடன் பொள்ளாச்சி அபி.!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
