முரண் 1

எனக்கு 10 வயது இருக்கும் பொழுது நடந்த சம்பவம்.என் வீட்டில் இருந்து பள்ளிகூடம் சுமார் 2 km இருக்கும் என நினைக்கிறன் ,நடந்தே செல்வோம் ,அதை விட இன்னும் தூரத்தில் இருந்து என் நண்பண்
வருவான் .மாலை வேளை சுமார் 5-6 மணிக்கு என் நண்பண் என் வீட்டினை கடந்து செல்வன் ,அதே நேரம் நானும் என் சகோதரன் மற்றும் பக்கத்துக்கு வீட்டு சிறார்கள் விளையாடி கொண்டு இருப்போம் .நண்பண் கையில் ஒரு பையுடன் என்னை பார்த்து சிரித்து கொண்டே செல்வான் இந்த நிகழ்ச்சி தினமும் நடக்கும் ,
அவன் தினமும் போகும் இடம் எங்கே ?.
என் வீட்டின் அருகே ஒரு சாராய கடை இருந்தது அதன் சுத்த தமிழ் பெயர் ஆயிர்வேத கசாயம் .இந்த சாராயத்தை தன் தகப்பனுக்கு வாங்க வருவான் .அவன் தினமும் என்னை கடக்கும் பொது என்னை பார்த்து சிரிப்பது ஏதோ உனக்கு என்ன விளையாடு விளையாடு என்பது போல் இருக்கும் .
அதே நண்பனை சில மாதங்களுக்கு முன் சந்தித்தேன்,அவனுக்கு குடிக்கும் பழக்கமே இல்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது ,,,தினமும் சாராய கடைக்கு நடந்தவனுக்கு பழக்கம் இல்லை ஆனால் ........................................(உண்மை சம்பவம் ஆனால் ஒரு பொய் உள்ளது கண்டுபிடிக்கவும் முடிந்தால் )

எழுதியவர் : nagaxcd (19-Mar-14, 11:11 pm)
சேர்த்தது : nagaxcd
பார்வை : 110

மேலே