பசுமையான நினைவுகள்

கை, கால்களில் எல்லாம்
புதிதாய் இறக்கைகள் முளைத்து
சந்தோசத்தின் உச்சி வானம் வரை
பறந்து திரிந்த காலம் அவை...

எப்படி தான் மறக்க முடியும்
அந்த பொன்னான நினைவுகளை
வீதியோரமாய் விடுமுறை நாள்
தேடியே விளையாடி மகிழ்ந்ததை

இரண்டாய் குழு பிரித்து ஆடிய
கிட்டிப்புள் - எத்துக்கம்பு கொண்டு
கிட்டிப்புள் தூக்கி வீசி ஆடியதை

தென்னை மட்டை மாட்டு
வண்டிப் பயனங்கள்
பனைமர நுங்குகளில் இணைத்த
தள்ளு வண்டிப் பயணங்கள்

மரக்கட்டையில் செய்த பம்பரமும்,
காலை, மாலையென தெருக்களில்,
கூடி கோலி அடித்து மகிழ்ந்ததை...

கழட்டிப் போட்ட சைக்கிள்
டயரும், வலயமும் எங்கள்
கால்கள் சென்ற இடங்கள்
எல்லாமே கூடவே பயணிக்கும்

பாடசாலை விடுமுறையில்
சாலையோரம் ஆடி மகிழ்ந்த
உள்ளூர் உலகிண்ண கிரிக்கட்
சுற்றுப் போட்டிகள்

மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்த
அந்த காலம் சுருங்கி இன்றே
ஐபாட், டாப்லட் வடிவில் அனைவர்
உள்ளங்கைகளிலும் தவழ்கிறது

அத்தனை சந்தோசங்கள்களும் இன்று
அடியோடு இழந்து விட்டோம்
சந்தோசங்கள் மட்டுமல்ல மாறாக
எங்களது மன நிலையம் தான்

பசுமைகள் எல்லாம் மறைந்து
பாலைவனமாய் மாறுது
அன்பில்லாத நெஞ்சங்களாக
வஞ்சங்கள் நிறைதுது...

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (21-Mar-14, 10:23 pm)
பார்வை : 1943

மேலே