முட்டிப்பேசும் முட்டைக்கண்களில்

முட்டிப்பேசும் முட்டைக்கண்களில்
நான் உடைந்துப்போகின்றேன்.

கல் கொண்டு வீசினாலேயே உயிருடையும்
இவள் முட்டைக்கண் கொண்டு வீசினால் என்னாகுமோ!

அள(ள்)’வாய் வெளியேறும் வார்த்தைகள் ஒருபோதும்
யாரையும் வலித்தராமல் மொழியாடும்.

அவள் வாய் அருளாய் மொழியும்
சங்கதிகள் போலில்லை சங்கீதம்.

இனிக்க இனிக்க யேசும்(திட்டுதல்)
எனக்கு விருப்பமாய் பேசும் அரவணைப்புகளில்
அவள் நினைப்பு அனைத்து விட்டுச்செல்கின்றன.

வருத்தப்பட்டு பாரம் சுமக்க வேண்டாம்
இவளில் செவிகளில் இட்டுவிடலாம்.

அவள் செவிகள் கேட்டுக்கொண்டிருப்பதால் என்னவோ
என் கவலைகளெல்லாம் விழுங்கிவிடுகின்றன.

மூங்கிலில் செல்லும் காற்று இசையாக வெளியேறுவது போல்
இவள் செவிகளுள் சென்ற கவலைகள் சந்தோஷ்மாக மாற்றடையும்.

என்போல் என்னை நேசிக்க
என் விருப்பத்துவாரங்களை நிரப்பிச்செல்லும்
அவளொரு பரிபூரணமே!

”எங்கே ஒளிந்திருந்தாய் இத்தனை நாளாய் என்றாய்!
நாணம் கண்ணாடியாய் காட்டிக்கொண்டிருந்தது என்னை!.”

வாழ’ப்பூவை தாங்குமா இவ்விடை!
வாழ’யிடை நோகுமோ இவ்வேளை!

கொழுப்பா! என்று கேட்கக்கூட உன் குறும்புகள் இடமளிப்பதில்லை
காரணம் கொழுப்புகள் கொன்ற மேனி!

தலைக்கேற்றி களைப்பாற்றி உருமாறும் ’தமனா’ இவள்
இமையுடைத்து இதயமடைத்து தடுமாரும் ’உமனா’ இவள்
தமிழூற்றி வழிந்தோடும் ’லெமனா’ இவள்.

பாராததை கற்பனை செய்தே
பாவி இவன் கனவு கலைந்ததே
பாவை இவளை கண் கண்டதோ
கனவுகள் கற்பனையானதோ!

அர்த்த பார்வைகள் பார்த்துவிட்டு
அபதங்களை கூறு நான் கற்பித்துக்கொள்கிறேன்
அர்த்த பார்வைக்கு அர்த்தங்கள் ஆயிரமென்றால்...

தமிழனை தலைநிமிர வைத்த பெருமைகளில்
இப்பெண்ணின் உயரத்திற்குமுண்டு.

’ஏறியாய்’ இருந்த இடமெல்லாம் ’ஏறியா’வாக மாறிப்போகும்
காலச் சிதறல்களில் பைந்தமிழ் பேசும் தீம்தமிழாள்.

பேசிவிட்டு சிர்த்துக்கொள்கிறாய்
நான் உறைந்துபோவேனேன் என அறிவாயா?

அளவாய் அழகும்!
அளவளாய் பழகும்! உன் விழி
சென்ற வழியெல்லாம் தீத்தெளிக்கிறதே!

எழுதியவர் : Ramachandran (22-Mar-14, 1:47 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 96

மேலே