தாய்

தாங்குவதால் தாய் என்று அழைக்கப்பட்டாளோ என்னவோ ,

அன்று நான்,கருவுற்ற போது தன் கருவறையில்
தாங்கினாள்,
நடைப்பழகும் வரை மாரிலும்,தோளிலும்
தாங்கினாள்,
கல்விப்பருவதித்தில் தன் கண்ணில் வைத்து
தாங்கினாள் ,
மனம் முடித்து சென்றதும்,தன் மனதில் வைத்து
தாங்கினாள் ,
இறுதியில் ,,,
தான் மடிந்தும் கூட ,
கதறி அழுத என்னை தாங்கியவள்-ஆய் தான் இருந்தாள்...
தன் "கல்லறையில் "!!!

எழுதியவர் : (28-Mar-14, 8:02 pm)
Tanglish : thaay
பார்வை : 246

மேலே