தாயில்லா சிறுபிள்ளை

தாயில்லாப் பிள்ளையின்
தடுமாறும் உள்ளதை
தந்தை ஆற்ற மாட்டாரோ-என்றால்
மணக்கோலம் பூண்டு
மறுதாரம் முடித்து வந்து
மகிழ்ச்சியின் ஆரம்பம்
மாளிகையின் உச்சியில்
இருப்பதைப் போல்
தன் பிள்ளை மறந்து
தங்கை ஒன்றை பெற்றெடுத்து
தத்துவத்தைக் கூறிச் சென்றார்
தன் நிலை நொந்து
சிற்றன்னையின் வளர்ப்பினில்
சீரழிந்து வளரும்
சின்னப் பிள்ளை !

தன் பிள்ளை பிறந்ததும்
இப்பிள்ளை யாரென
சீறி விழும் சிற்றன்னையின்
சீற்றத்தைக் கண்டுக்
காயப்பட்ட உள்ளதை
கண்ணீரால் தோய்த்தெடுத்து
தினம் தினம் தேற்றுகிறாள்
தன் உள்ளதை -இன்றோடு
முடிந்துவிடும்
என் வேதனை எனக் கூறி....!

எழுதியவர் : பெ.ஜான்சி ராணி (4-Apr-14, 8:35 am)
பார்வை : 145

மேலே