காத்திருப்பேன்

நின்று பேசினால் யாரும்
பார்த்து விடுவார்களென...
நீ முன் செல்ல....
நிற்கச் சொல்லியே
நான் பின்தொடர...
சட்டென்று நின்று
''இல்ல அண்ணா'' இப்போதான் கல்லூரி விட்டதுன்னு நீ சொல்ல.....
அந்த பெரியவர் சிரித்துக்கொண்டே செல்ல...
நான் மீண்டும் பின்தொடர.....

அன்றொருநாள் .....
''நான் வெளியே போறேன்
தோழிகள் கூட''ன்னு
நீ சொல்ல ....
பார்த்தவேலையை விட்டபடி தேடி வர ...
உன் தோழிகள் அறியாவண்ணம்
உன்னை பின்தொடர .....

இன்னொருநாள் .....
நீ புடவையில் வந்திருப்பதாகச் சொல்ல...
வீட்டில் வெள்ளை இருப்பதாகச் சொல்லி
நண்பர்களை ஏமாற்றிவிட்டு வர....
நின்று பேச நேரமில்லையென
நீ வெரசா போக....
நான் வெகுளியா நிற்க ....

மற்றொருநாள் ....
மருத்துவமனை செல்வதாக சொன்னாய் ....
என்னவோ ஏதோ என்று அங்கு வர ....
ஏமாற்றம் தந்தே சென்றாய் ....

இன்னும்
''இரண்டு முறை ஏமாற்றுவாய்''
என எண்ணுகிறேன்
ஏனெனில்
போன பிறவியில்...
''ஆறு முறை''
உன்னை அலைய வைத்திருக்கிறேன்....

உன்னை நானும்
என்னை நீயும்
இன்னும் எத்தனை முறை
அலைய வைத்தாலும்
பரவாயில்லை.....
அடுத்தடுத்தப் பிறவியில்
சரி செய்துக்கொள்வோம்.....

ஏனெனில் நாம்.....

சாதிப் பிரிவினைகளைத் தாண்டி....
சமயக்கோட்பாடுகளைத் தாண்டி...
சமத்துவம் மட்டும் வேண்டி...
சாம்பலாக வாழ்கிறோம் இடுக்காட்டில் ......

எழுதியவர் : பார்வைதாசன் (5-Apr-14, 7:02 pm)
Tanglish : kaathirupen
பார்வை : 111

மேலே