+எழுத்து துளிப்பா+
![](https://eluthu.com/images/loading.gif)
நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாய்
எத்துனை மாற்றங்கள்
பெண்ணாகினாளோ எழுத்து..!
எல்லோருக்கும் வாய்ப்பு
யாருக்குமில்லை ஏய்ப்பு
ஜெயிப்பது நீ மட்டுமே எழுத்துபிரதமா..!
சட்டம் நிறைவேறியதோ இல்லையோ
மகளிருக்கான உரிமை
அள்ளித்தருகிறது எழுத்துஅமைச்சரவை..!
பல படைப்பு பிரமாக்களை உருவாக்கிய
மகா பிரம்மா
எங்கள் எழுத்து பிரம்மா..!
நட்புக்கு உருவமோ வயதோ வேண்டாமென்பதை
அழகாக சொல்லித்தருவதே
எங்கள் எழுத்து கல்லூரி..
துளித்துளியாய் தமிழ்சேர்த்து
பெருங்கடலாய் ஓரு நாள் உலகை ஆண்டிடும்
எங்கள் எழுத்து சக்கரவர்த்தி..