எழுத்து

முன்னொரு நாளில்
எதை எதையோ நினைத்து
உறக்கத்தை மறந்து
கவிதை எழுதினேன்
சொல் அகப்படவில்லை
அகப்பட்ட தருணம்
கவிதையாய் எழுதவில்லை
எழிலான இயற்கை தேசத்தில்
பாலைவனம் படர்ந்ததுபோல்
எனக்கும் கவிதைக்கும்
ஏழாம் பொருத்தம்
சொல்வதற்கு அழகான சொல்
எழுதுவதற்கும் அழகான வார்த்தை
இது இல்லையென்றால்
கவிதைக்கும் கவிஞனுக்கும்
கவிஞனுக்கும் கவிதைக்கும்
என்றும் ஏழாம் பொருத்தம்

எழுதியவர் : திருப்பதி (7-Apr-14, 8:02 pm)
சேர்த்தது : Thiruppathi
Tanglish : eluthu
பார்வை : 90

மேலே