ஒருமுறை எனைப் பார்

இலைகளில் மழைவிழ
வேர் வரை வலிவர
உயிர் வரை நனைக்கிறது காதல்
உடலதனை எரிக்கிறது ஊடல்

வெண்ணிலவை கேலி செய்யும்
பெண்ணழகே --நீ

விட்டுப் பிரிந்த நொடிகளிலிருந்து
வேதனையை மட்டும்

சுகமென
சுவைத்துப் பழகி விட்டது இதயம்

என் இரவெல்லாம் விழிகளுக்குள்
விழுந்து கொண்டு இமை தழுவும்
கனவையெல்லாம்
திருடிக் கொள்கிறாய்

திருடிய கனவுகளை



திருப்பிக் கேட்க்க -என்றேனும்
உன் வாசல் வந்து
மண்டியிட்டு மன்றாடுவேன்

ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து
ஓரக் கண்ணில்
ஒருதுளி நீருடன்
ஒருமுறை எனைப் பார்

அது போதும்
என் ஆயுளின் விமோட்ச்சணம்
கண்டு கொள்வேன் உன் கண்களில் .....

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (8-Apr-14, 3:41 pm)
Tanglish : orumurai enaip paar
பார்வை : 131

மேலே