இமை மூடாதே
பெண்ணே
இதழ் பருகும்
இனிய பொழுதுகளில்
இமைப் பொழுதும்
இமை மூடாதே
நம்
இதழ்கள் படும்
ஆனந்த
அவஸ்தையின்
மௌன
மொழியை
நமக்குத் தெரிந்த
மொழியில்
மொழிபெயர்ப்பது
உனக்கு
என் விழிகளும்
எனக்கு
உன்
விழிகளும் தான் ............