கடந்த வயது

பள்ளி பருவத்தில் ஒன்றுமே தெரியாத குழந்தையாக
வைத்தேன் காலடியை கல்லூரியில்
கற்று கொண்டேன் நன்றாக குடிக்க! பிடிக்க!!
மனம் ஒன்றி போக நண்பர்கள்
எங்களுக்கு என்றுமே வந்ததில்லை பணப்பற்றாக்குறை
பொழுதை கழிக்க நிறைய இருந்தன
எங்களுக்கான குட்டி சுவர்கள் இன்றும் நினைவுகளா!!
சாதனையை கின்னஸ்லும் போடலாம்
பத்து பேரிடம் போராடும் ஒரு சிகரெட்
இன்ப காலம்!!!!
வைத்தேன் காலடியை சென்னையில்
அன்னார்ந்து பார்க்க வைத்தது விமான சத்தம்
அறியாமல் உட்கார வைத்தது பேருந்தில் மகளிருக்கான இடத்தில்
மனம் ஒன்றி போக நண்பர்கள்
பணப்பற்றாக்குறை வராத நாட்களே இல்லை
முதலில் மிகவும் அதிசயமாக இருந்தது spencor மற்றும் பீச்சும்
பசியை தொலைத்தோம் தூக்கத்தை தொலைத்தோம்
பல போராட்டத்துக்கு இடையில் ஒரு வேலை
சோதனை காலம்!!!!!!

எழுதியவர் : உலக தமிழன் (24-Feb-11, 7:05 pm)
சேர்த்தது : ulaga thamizan
Tanglish : kadantha vayathu
பார்வை : 396

மேலே