என்னில் நிறைந்துவிட்டாய்

என் கண்ணில் பட்ட உன்னை
மறக்க நினைத்தேன்
ஆனால் நீ
என் மூச்சுக்கற்றில் நுழைந்து
சிறகடித்து பறக்கிறாய்

மீண்டும் உன்னை மறக்க நினைத்தேன்
ஆனால் நீ
என் இரத்த ஓட்டத்தில் புகுந்து
நீச்சல் அடிக்கிறாய்

மீண்டும் உன்னை மறக்க நினைத்தேன்
ஆனால் நீ
என் இதயத் துடிப்பில் புகுந்து
இசை மீட்டுகிறாய்

மீண்டும் உன்னை மறக்க நினைத்தேன்
ஆனால் நீ
என் நரம்புகளில் புகுந்து
நாட்டியம் ஆடுகிறாய்

இப்பொழுது நான்
என்னை மறந்துவிட்டேன்
ஏனெனில்
என்னில் நீ முழுவதும்
நிறைந்துவிட்டாய் !!!

எழுதியவர் : ஜான் பிராங்க்ளின் (12-Apr-14, 2:23 pm)
பார்வை : 99

மேலே