இந்த காதல் போதும் பெண்ணே - இன்னும் வளரும் என்னுள்ளே --- இராஜ்குமார் ---

எனை ஒரு
துகள்
துரத்தி
தூரமாய்
தூக்கி வீச ...

வீசிய வேகத்தில்
தூளாகி ,,,,
தூய்மை அடைந்தேன் ...!
காதலின்
மேன்மை அறிந்து ..!!

அத்துகளின்
வாசம் வாங்கி
வங்கியில் சேமித்தேன்

வட்டி மட்டுமல்ல
முதலீட்டிலும்
முதல் ஆளாய் ..!!

உன் நினைவெனும் சிறகில்
பறவை என பறந்தேன் ..

பறந்து போன என் மனமோ
மீண்டும் வந்தே மிரட்ட
பாதை மறந்தது
பறவைக்கும்
பாவை உனை
பார்த்ததுமே ..!!

உனை
தேடி திரியும் இப்பறவை

சிறகால் சிரித்து
இதழ் பார்த்து
இறங்கி
தென்றல் வீச
கொஞ்சம் கொடுத்தது
காதல் குழந்தையை

இனி
கொல்வதும்
கொஞ்சுவதும்
உன் கையில் ..!!

சொல்லிக் கொள்ளா
சோகத்திலும்
சொர்க்கம்
உன் நினைவு ..!

கிளையும் கீற்றும் - இலை
அசைக்கும் காற்றும்
கண்ணில் காட்டுதே
உன் நினைவை
அழகழகாய் !!

சிறு இதழ் சிரிப்பில்
சிணுங்குகிறாய் கொஞ்சம் ..!!
மறுமுறை பார்த்தால்
மயக்குகிறாய் நெஞ்சம் ..!!

அழகிய மலரின்
வண்ணம் போய்
வாசம் போய்
வாடிய பின்னும்
இருண்ட கண்ணிற்கு
இதமாய் இக்காதல் ..!!

ஏற்கா இக்காதலும்
போதும் பெண்ணே .!
இனி
இன்னும்
வளரும் என்னுள்ளே ..!!

புருவம் தேய்த்தே
புத்தி வளர்கிறேன் .!
எனை ஏற்க மறுத்த
உந்தன் நினைவில் ...!!

-- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (16-Apr-14, 12:31 am)
பார்வை : 667

மேலே