நினைவின் பொக்கிஷம்

மலராத என் மனதையே
மலர செய்ததது உன் காதல்..
வார்த்தைகளின் சலனத்திலும்
மவுனமொழி பேசியது உன் விழிகள்..
உன் பெயரினை அழகாய் எழுதியே
கவிபழகியது என் கைவிரல்கள்..
நம்மிடையே கடிதங்கள் பரிமாறியே
நண்பர்களானது நம் புத்தகங்கள்....
உனக்காக நானிருப்பேன் என்றவுன்
வார்த்தையே என்னுயிர் காப்புறுதி..
இவையெல்லாம் இன்றளவும்
உன்னினைவால் வந்துபோகும்
என் இதய பொக்கிஷங்களே...!!