காதலாகிப் போகின்றேன்
என்
பார்வையின்
எல்லைக்குள்
என் தேவதை..!!
எல்லை இல்லா
இன்பத்தில் நான்..!!
அந்த
கணம்வரை
கிறுக்கப்பட்ட
எண்ணங்களை எல்லாம்
முழுவதும் துடைத்து
சற்று நேரத்தில்
மனதினை
ஒரு வெற்றுக் காகிதமாக
மாற்றிவிடுகின்றது..
பட்டாம்பூச்சியின்
சிறகுகளைப்போல
படபடக்கும்
நிலை கொள்ளா இமைகள்..!!
ஒரு ஓவியனின்
கருந் தூரிகையைப்போல்
கருவிழிகள் இரண்டும்
காதல் வண்ணத்தினுள்
மூழ்கி எழுந்து
பார்வைகளை
பக்குவமாய்
வரையத் துவங்கிவிடுகின்றன..!!
இதயம் அங்கே
பேரின்ப இசை ஒன்றினை
எனக்குள் இதமாக
இசைக்கத்
துவங்கி விடுகின்றது..!!
இரத்த நாணங்கள்
ஒவ்வொன்றும்
அந்த இதயத்தின்
இசைக்கேற்ப முறுக்கேறி
அசைவுகொடுத்து
உடல் சிலிர்க்க
ஒரு உயிர் நாட்டியம்
புரிகின்றது..!!
உயிர்ச் சுடரின்
ஒளி வெள்ளம்
என்
முகம் முழுக்க
படர்கின்றது..!!
உள்ளங்கால்
அனிச்சையாய்
அசைகின்றது..
உள்ளம் நிறைந்த
என்னவளின்
பின் தொடர பணிக்கின்றது..!!
கணப் பொழுதுகளில்
அங்கிருந்த நான்
நானாக இல்லை
கடல் கண்ட நதி
கடலாகிப் போவதுபோல்
அந்த
காதலாகவே
மாறிவிடுகின்றேன்..!!

