வெங்காயம்Mano Red
இருக்கும்
ஆனால் இருக்காது,
ஏன் இருக்காது...??
நிச்சயமாக
ஏதோ ஒன்று இருக்கும்,
இல்லையெனில்
இருப்பது போலாவது இருக்கும்..!
இருக்கவே இருக்காது என்று
நினைத்த ஒன்று தான்,
எங்கோ இருந்து கொண்டு
இருப்பதையும்,
இனியிருக்கப் போவதையும் உணர்த்தும்.!!
இது இல்லாமல்
போனால் என்ன...??
எது இருந்தாலும்,
இல்லையென்றாலும்
நமக்காகவே காத்து இருக்கும்
எங்கோ எதோ ஒன்று...!!
எப்போதோ இருந்த ஒன்று
இப்போது இல்லாமல் இருக்கலாம்,
இருந்த ஒன்றுக்கு மட்டுமே
இல்லாமலும் போவதற்கு முடியும்...!!
எதாவது ஒன்று இருக்கும் போது
இல்லாத ஒன்றைத் தான்
இருக்க வேண்டுகிறது மனம்,
இருந்தது இருப்பது போலவே
இன்றும் இருந்தால் நன்று தான்..!!
இதெல்லாம் ஒரு ஓரமாய்
இருக்கட்டும்,
பெரியார் சொன்ன வெங்காயமும்,
நான் சொல்ல வரும் வெங்காயமும்
ஓரளவிற்கு ஒன்று தான்...!!
ஏதோ இருக்கும்
ஆனால்,
எதுவுமே இருப்பதாய் இருக்காது...!!