வேதி வினை நிகழ்த்தியக் காதல்

உணர்ச்சிப் பெருக்கின்
உச்சம் கண்டேன்
நாடி நரம்பின்
நாதம் கேட்டேன்
இளந்தென்றல் வீசக் கண்டேன்
இனிமை கீதம்
இசைக்கக் கேட்டேன்
இதய துடிப்பின்
ராகம் கேட்டேன்
ஹார்மோன் வேலை
ரசிக்க செய்தேன்
வேதி வினைகள்
நிகழக் கண்டேன்
கவிதை தாகம்
பிறக்க கண்டேன்
கனவு தேசம்
கடந்து சென்றேன்
உயிர் உருகும்
உன்னதம் புரிந்தேன்
மெல்ல தொலைந்த
மாயம் உணர்ந்தேன்
கோடிபூக்கள்
வாசம் நுகர்ந்தேன்
சுற்றம் சூழ்
உலகை மறந்தேன்
தனிமை தாகம்
விரவக் கண்டேன்
பசி இல்லாப் பிணி
பரவக் கண்டேன்
இத்தனை மாற்றம்
என்னுள்ளே....
ஒருத்தி விதைத்த
காதல் விதையால்.....

எழுதியவர் : சித்ரா ராஜ் (26-Apr-14, 5:59 pm)
பார்வை : 88

மேலே