என்னை அழ வைத்த ஒரு புகைப்படம்
![](https://eluthu.com/images/loading.gif)
கையேந்தி நிற்கும்
ஒரு பாலகச் சிறுமி
பாத்திரம் கூட இல்லையே ...
அதற்கும் வறுமையா ? இல்லை
அதில் போடும் அளவிற்கு
அடுத்தவருக்கு வறுமையா !?
நாங்களும்
நினைத்திருந்தால்
எத்தனை பேருக்கு
நிழல் கொடுத்திருக்கலாம்
கொடுக்கத்தகுதி பெற்ற
ஒவ்வொருவனும்
பாவிதானே ......
இத்தனை நாள் கை நீட்டிய - நீ
ஒரு நாளாவது விரல் நீட்டியிருக்கலாம்
சே.....
அர்த்தங்கள் புரியாமல்
சேமிப்புக்களை மட்டும் தேடலாக்கி விட்டு...
மனச்சாட்சியை தொலைத்து விட்டோம்....
சத்தியமாய்....
அழுக்கான - உன்
பிஞ்சுக்கைகளுக்குள்
முகம் வைத்து அழ வேண்டும்.
புண்ணியத்தை
உன்னிடம்
பிச்சை கேட்க வேண்டும்
வா....
நான் திருத்தி எழுதும்
உன் எதிர்காலத்திலாவது
என் பாவம் கழுவப்படட்டும்.