மின்சார இறுதி ஊர்வலம்

பட்டனை
தட்டி விட்டா
இரண்டு தட்டுலே
இட்லியும்
சட்னியும்
வந்து சேரனும் ...

விஞ்ஞானத்தை
வளர்க்க போறேண்டி======

திரைப்பட பாடல்
முழுமை பெறுகின்றது

விஞ்ஞானம்
வளர்ந்ததால்

பட்டனை
தட்டி விட்டா
இறந்த உடலின்
எலும்புகள்
சாம்பலாய் ======

மின்சாரம் மூலம்
இயக்கப்படும்
இறுதி சடங்கு இயந்திரம்
593 டிகிரி celsius வெப்பநிலையில்
இயக்கப்படுகின்றன .

கதவுகள்
மூடப்பட்டபின்
ஜெட் என்ஜின் தன்
வேலையை துவங்கும்

தட்டு சூடாக்கப்படும் போது
மனித உடலின்
தோல் மெழுகு போல் ஆகி
மிருதுவான தசைகள் இறுகி
எலும்புகள் உடைந்து
3 மணி நேரத்தில்
மனித உடலின் சாம்பல் ..
கிடைக்கும் சாம்பலின் அளவு
3 - 9 பவுண்ட்ஸ் எடை =====

ஆக்கம் 9 மாதம்
அழிவு 3 மணி நேரம்

ஆட்டம் = இடைப்பட்ட வாழ்க்கை

இறுதி சடங்கிற்கு
முன் பதிவு அவசியம்

இதிலும் வர்த்தகம்
தலை விரித்து ஆடலாம்

அந்திமத்தில்
எல்லோருக்கும் ஒரு தட்டு தான்====

...

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (30-Apr-14, 7:54 am)
பார்வை : 137

மேலே