நிலைமாறும் உலகில்

மாறுது மானுட வேசம்
மாறுபடும் புதுமை நாசம்
பிளாஸ்டிக் பயன்படுத்தாதே !
விளம்பரம் அருமை
துணி வாங்கிய நெகிழிப்பையில் ...

சிட்டுக்குருவி எங்கே ?
சிறுமீன் அயிரை எங்கே ?
சிதைந்தனவோ சிற்றினங்கள் ?

சினை முடுச்சு எல்லாம்
சிரங்கு கொப்புலங்கள்
விளை நிலம் எல்லாம்
அடுக்கு மாடி கட்டிடங்கள்
வளரும் மருத்துவம்
புனுண்டாகி
மருந்து போடும் தத்துவம்

போகுது பார் புகைமண்டலம்
முகிழ் கூட்டம் போல
பெய்யுது பார் அமில மழை
அனைதுயிரின் மேலே
மழை நீராம் நமது உயிர்நீர்
இன்றதுவோ நம் கண்ணீர் !
ஆயுட்காலம் அரையாட்சு
அசுத்தங்களால்
அதுவும் போச்சு!

எழுதியவர் : மா.காளிதாஸ் (1-May-14, 1:15 pm)
பார்வை : 194

மேலே